தமிழ்நாடு செய்திகள்

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு இலங்கை முன்னாள் அதிபர் மகன் வாழ்த்து!

Published On 2025-12-28 12:59 IST   |   Update On 2025-12-28 12:59:00 IST
  • எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்
  • சினிமா உலகம் நிச்சயமாக அவரது இருப்பையும், துடிப்பையும் மிஸ் செய்யும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  

"எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். அவரது சினிமாப்பயணம் மற்றும் திரையில் அவர் வெளிப்படுத்திய ஆற்றல் சிறப்பானவை, மறக்கமுடியாதவை. அவர் இந்தக் அத்தியாயத்தை முடித்துக்கொண்டு ஒரு புதிய பயணத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில், சினிமா உலகம் நிச்சயமாக அவரது இருப்பையும், துடிப்பையும் மிஸ் செய்யும். வரவிருக்கும் அனைத்திலும் அவருக்கு வெற்றியும், நல்வாழ்த்துக்களும் மட்டுமே கிடைக்க வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 


Tags:    

Similar News