தமிழ்நாடு செய்திகள்

SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. ஆர்ப்பாட்டம்

Published On 2025-11-16 07:52 IST   |   Update On 2025-11-16 07:52:00 IST
  • தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின்பேரில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

சென்னை சிவானந்தா சாலையில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள் தி.நகர் க.அப்புனு, அம்பத்தூர் பால முருகன், இ.சி.ஆர்.சரவணன், பூக்கடை குமார், பழனி, கட்பீஸ் விஜய், சபரிநாதன், தாமு உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்கிறார்கள்.

பின்னர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதே போல் தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News