தமிழ்நாடு செய்திகள்
த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா- விஜய் வருகை
- அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் வகையில் த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
- சுமார் 2000 பேர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் வகையில் த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா 3-வது ஆண்டாக இன்று நடைபெறுகிறது.
விழாவிற்கு மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என சுமார் 2000 பேர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தனி அடையாள அட்டைகள் மூலம் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று காலை 9.20 மணியளவில் விழா நடைபெறும் ஓட்டலுக்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் விஜயை வரவேற்றனர்.