பவள விழா பாப்பா... நீ பாசாங்கு காட்டாதே பாப்பா... சிரித்துக்கொண்டே தி.மு.க.வை கிண்டலடித்த விஜய்
- விவசாயமும் விவசாயிகளும் அழிந்தால் நாமெல்லாம் அழிந்து போக வேண்டியது தான்.
- தி.மு.க அரசின் பிரச்சனை என்னவென்றால் மக்களைப் பற்றி சிந்திப்பதற்கே நேரமில்லை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், தி.மு.க. மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும் அவர் பேசுகையில், காஞ்சிபுரம் என்றாலே பட்டு என்று உலகத்திற்கே தெரியும். ஆனால் இன்றைய நெசவாளர் நிலை வறுமை, கந்துவட்டி கொடுமையாக உள்ளது.
* இந்த அரசால் டெல்டா மாவட்ட விவசாயிகள் எப்படி பாதிக்கப்பட்டார்களே அதேபோல் நெசவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* விவசாயமும் விவசாயிகளும் அழிந்தால் நாமெல்லாம் அழிந்து போக வேண்டியது தான்.
* உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை ஒரு கட்சி சிண்டிகேட் அமைத்து கொள்ளை அடிப்பதை பார்த்திருக்கிறீரா?
* தி.மு.க அரசின் பிரச்சனை என்னவென்றால் மக்களைப் பற்றி சிந்திப்பதற்கே நேரமில்லை.
* குறி வைத்தால் தவறாது, தவறும் என்றால் குறியே வைக்கமாட்டேன் எம்.ஜி.ஆர். வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
* இந்த விஜய் சும்மா எதையும் சொல்ல மாட்டான்... ஒன்னு சொன்னா அதை செய்யாம விடமாட்டான்...
* பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாதே பாப்பா. நீ நல்லவர் போல நடிப்பதை பார்த்து நாடே... என்று கூறி விட்டு சிரித்தார்.
* பாப்பானு ஆசையா, பாசமா, சாஃப்ட்டா தான் சொன்னோம். ஆனா அதையே விமர்சனமா எடுத்துக்கிடா எப்படி. நாங்க இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவே இல்லையே. அதுக்குள்ள அலறுனா எப்படி?
* வெளியில் செல்ல அனுமதி கிடைத்தவுடன் நிச்சயம் வெளியில் வருவோம் என்றார்.