தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா - செய்தியாளர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்ததால் பரபரப்பு

Published On 2025-02-26 10:55 IST   |   Update On 2025-02-26 11:16:00 IST
  • அரங்கிற்குள் போதிய இருக்கை வசதிகள் செய்யப்படவில்லை.
  • சுமார் 2000 பேர் பங்கேற்கும் அரங்கத்திற்குள் 3000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் பங்கேற்க காலையில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் விழா நடைபெறும் பகுதியை சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, அரங்கிற்குள் போதிய இருக்கை வசதிகள் செய்யப்படவில்லை, காலை உணவு வழங்கப்படவில்லை, சுமார் 2000 பேர் பங்கேற்கும் அரங்கத்திற்குள் 3000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதற்கிடையே பாஸ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படாததால் அரங்க நுழைவு வாயில் முன்பு பலர் காத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை பவுன்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பவுன்சர் தாக்கியதில் நெஞ்சு வலிப்பதாக செய்தியாளர் கூறியதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விழா அரங்கிற்குள் செய்தியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், வீடியோ, புகைப்படக்காரர்கள் வெளியில் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News