தமிழ்நாடு செய்திகள்

அலங்கோலமாக காட்சியளித்த த.வெ.க. மாநாட்டு திடல்- ஏராளமான நாற்காலிகள் சேதம்

Published On 2025-08-22 14:26 IST   |   Update On 2025-08-22 14:26:00 IST
  • த.வெ.க. மாநாட்டு பந்தலில் இருந்து உள்ளூர் மக்கள் பல பொருட்களை அள்ளி சென்றனர்.
  • 2, 3 வாட்டர் டேங்குகளை தலையில் வைத்து தூக்கி சென்றனர்.

மதுரையில் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு நேற்று நடந்தது. திரளான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டு திடல் இன்று அலங்கோலமாக காட்சியளித்தது.

மாநாட்டில் போடப்பட்டிருந்த நாற்காலிகள், தடுப்புகளை உடைத்து த.வெ.க. தொண்டர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

மாநாட்டிற்கு கேரளாவில் இருந்த கொண்டுவரப்பட்ட ஏராளமான நாற்காலிகள் இனி பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தன. உடையாத நாற்காலிகளை மட்டும் மீண்டும் ஒப்பந்ததாரர்கள் எடுத்து சென்றனர். ஏராளமான தடுப்புகளும் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பாக ஒப்பந்ததாரர் ஒருவர் கூறுகையில்,

த.வெ.க. மாநாட்டு பந்தலில் இருந்து உள்ளூர் மக்கள் பல பொருட்களை அள்ளி சென்றனர். மாநாடு நடைபெற்று முடிந்த இடத்தில் இருந்த 200 இரும்பு ராடுகளை காணவில்லை. பாதுகாப்புக்காக போட்டிருந்த தகர சீட்டுகளை அள்ளி சென்றுள்ளனர்.

எங்கள் பொருட்கள் எங்கள் கண்முன்னாலே களவு போனது. 2, 3 வாட்டர் டேங்குகளை தலையில் வைத்து தூக்கி சென்றனர். ஏன் எடுத்துச் செல்கிறீர்கள் என கேள்வி கேட்டால் அடிக்க பாய்ந்தனர் என்று கூறினார்.

காணாமல் போன பொருட்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News