தமிழ்நாடு செய்திகள்
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
- இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
- பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 04) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு தெற்கே கரையை கடந்தது.
இதனால் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
இதனையடுத்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.