தமிழ்நாடு செய்திகள்
கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசு - உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு அரசு
- புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதி வழங்கப்படவில்லை.
- தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் ரூ.2291 கோடி நிதி தரப்படும் என மத்திய அரசு கூறுவது சட்டவிரோதம்.
சென்னை:
தமிழ்நாட்டுக்கு நியாயமாக தர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதி வழங்கப்படவில்லை எனவும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் ரூ.2291 கோடி நிதி தரப்படும் என மத்திய அரசு கூறுவது சட்டவிரோதம் என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ. 2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.