தமிழ்நாடு செய்திகள்
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.-விற்கு கிடைத்த வெற்றி- என்.ஆர்.இளங்கோ எம்.பி
- இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.
- எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
எஸ்ஐஆர் படிவங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி என திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
எஸ்ஐஆர் பணிகள் இன்னும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது, அவை தீர்க்கப்படவில்லை.
இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.
எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
எஸ்ஐஆர் விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக திமுக மீது அதிமுக குற்றம்சாட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.