தமிழ்நாடு செய்திகள்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது "டிட்வா" புயல்
- தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல்.
- டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல், அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்தது.
டிட்வா புயலின் நகர்வை காரைக்கால் மற்றும் சென்னையில் உள்ள டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை காலை மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.