தமிழ்நாடு செய்திகள்
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார கூட்டத்திற்கு வந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
- கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம்.
- அர்ஜுனன், பிரசார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தார்.
ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டனர்.
இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரசார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.