தமிழ்நாடு செய்திகள்

சென்சார் போர்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published On 2026-01-09 20:45 IST   |   Update On 2026-01-09 20:45:00 IST
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.
  • தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்து விசாரணையை ஜன.21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில், மனுவிசாரணை 3.30க்கு தொடங்கியது. அப்போது, சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் எனக்கூறி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்து விசாரணையை ஜன.21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், மத்திய தணிக்கை வாரியத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News