தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்- சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க மனு

Published On 2025-11-11 10:57 IST   |   Update On 2025-11-11 10:57:00 IST
  • அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச்சின்னம் கோரி இன்று முதல் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • கட்சியின் நிர்வாகிகள் டெல்லி தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று மனு வழங்கியுள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பொதுச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச்சின்னம் கோரி இன்று முதல் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுச்சின்னம் கோரி த.வெ.க. மனு அளித்துள்ளது.

தங்களது கட்சிக்காக 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலை வழங்கி அவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்கீடு செய்யுமாறு த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் டெல்லி தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று மனு வழங்கியுள்ளனர். 

Tags:    

Similar News