தமிழ்நாடு செய்திகள்
த.வெ.க என்றாலே மற்ற கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது- புஸ்ஸி ஆனந்த்
- 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
- பூத் கமிட்டி கருத்தரங்கில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்ியது.
இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.
பூத் கமிட்டி கருத்தரங்கில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.
அப்போது அவர்," தமிழக வெற்றி கழகத்தால் மற்ற கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது. தவெகவின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.