விஜய் வீட்டில் நடைபெற்ற 2 மணி நேர ஆலோசனை நிறைவு- செங்கோட்டையன் புறப்பட்டார்
- செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று ராஜினாமா.
- செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்க வாய்ப்பு.
செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. நாளை த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும், அவருடன் ஆதரவாளர்களும் த.வெ.க. சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
தவெகவில் செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு செங்கோட்டையன் வருகை தந்த நிலையில், விஜயை சந்தித்தார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை தற்போது நிறைவு பெற்றது.
இதன் பின்னர், செங்கோட்டையன் காரில் புறப்பட்டுச் சென்றார். மேலும், செங்கோட்டையனிடம் இருந்து நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.