தமிழ்நாடு செய்திகள்

ஆவின் பாலகங்களை 24 மணிநேரமும் இயக்க அரசு நடவடிக்கை

Published On 2024-11-26 14:43 IST   |   Update On 2024-11-26 14:43:00 IST
  • பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படும்.
  • 8 கடைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறுகிறது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த 'Fengal' என்ற பெயர் சூட்டப்பட்ட உள்ளது.

இதனிடையே இந்த Fengal புயல் இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாட்டி நோக்கி நகருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும் 12-20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 4 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழையை கருத்தில் கொண்டு சென்னையில் 24 மணிநேரமும் ஆவின் சேவை இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகபட்சமாக ஒருவர் 4 பால் பாக்கெட்டுகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து ஆவின் பால் பவுடர் மற்றும் பால் விநியோகக்கப்படும்.

அண்ணாநகர் டவர், மாதவரம் பால்பண்ணை, வண்ணாந்துரை, பெசன்ட் நகர், வசந்தம் காலனி, அண்ணாநகர் கிழக்கு, சோழிங்கநல்லூர் பால்பண்ணை, விருகம்பாக்கம், சி.பி.இராமசாமி சாலை ஆகிய 8 கடைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News