டங்ஸ்டன் சுரங்கத்தற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
- கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
- கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக ஜூன் 20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 10 நாட்கள் கூட்டம் நடந்தது.
பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும்.
அந்த வகையில், பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டசபை தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தோம். மத்திய அரசு நினைத்தால் எந்த இடத்திலும் சென்று கனிமம் எடுக்க தமிழக அரசு ஒத்துக்கொள்ளாது என எதிர்ப்பு தெரிவித்தோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மாநில உரிமை பறிபோகும்போது பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது என்று இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள் வரவேற்பு.
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.
மதுரையில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்வது குறித்து ராஜன் செல்லப்பாவின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
கடந்தாண்டு குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பாதாள சாக்கடை பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மதுரை புறநகரில் ரூ.2,000 கோடி, மாநகர பகுதியில் ரூ.1,500 கோடியில் கூட்டு குடிநீர் திட்டப்பணி நடைபெறுகிறது.
வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து மதுரை பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு 3-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் 3 ஆண்டுகளில் 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.