டங்ஸ்டன் சுரங்கத்தற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
அறந்தாங்கி புதிய பேருந்து நிலையம் தொடர்பாக எம்எல்ஏ அறந்தை ராமச்சந்திரனின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
பேருந்து நிலையம், சந்தை அமைப்பதற்கான செலவைவிட நிலம் கையகப்படுத்துவதற்கு ஆகும் செலவு அதிகம்.
அறந்தாங்கி நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று - அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
50 பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் சேதாரங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
மலட்டாற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டிய தேவையிருந்தால் உடனடியாக பலப்படுத்துவோம்- அமைச்சர் துரைமுருகன்
தென்பெண்ணையாற்று உபரிநீர் மலட்டாற்றில் திறந்துவிடப்பட்டு 13 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. கரையை பலப்படுத்த கோரிக்கை.
தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் சேதாரம் ஏற்பட்ட இடங்களில் செப்பனிடும் பணிகள் நடைபெறுகின்றன- அமைச்சர் துரைமுருகன்
2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
திருவண்ணாமலை மாவட்டத்தில் துரிஞ்சிலாற்றில் தடுப்பணை கட்டப்படுமா என கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
தற்போது வரும் மழையில் அணையே தாங்காத நிலையில் தடுப்பணை தேவையா என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சோமரசம்பேட்டை அருகே உய்யக்கொண்டான் வாய்க்காலில் 2 சிறிய தடுப்பணை கோரிய எம்.எல்.ஏ. பழனி பாண்டிக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
உய்யக்கொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது. வேண்டுமெனில் கால்வாய் சீரமைத்து தரப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது.
மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது.