தமிழ்நாடு செய்திகள்
திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனையாக அமையும்- பிரசார கூட்டத்தில் விஜய் பேச்சு
- ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்க்க வந்துள்ளேன்- திருச்சி கூட்டத்தில் விஜய்.
- மடதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்.
திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றுகிறார்.
தவெக விஜய் பரப்புரை வாகனத்தில் ஏறி நின்றி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் தெரிவித்து உரையை தொடங்கினார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது:-
போருக்கு செல்வதற்கு முன் பெற்றி பெறுவதற்காக குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவர்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்துள்ளேன்.
திருச்சியில் இருந்து தொடங்கிய எல்லாம் திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள்.
மடதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்.
1956-ல் அறிஞர் அண்ணா, 1974-ல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாநாடு என பல வரலாறுகளை கொண்டது திருச்சி.
உங்களை பார்த்தவுடன் ஒரு எமோஷனல் கணெக்ட், மனதில் ஒரு பரவசம்.
இவ்வாறு அவர் கூறினார்.