தமிழ்நாடு செய்திகள்

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க தனிப்படை அமைப்பு

Published On 2025-06-25 10:51 IST   |   Update On 2025-06-25 10:51:00 IST
  • தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார்.
  • வீட்டில் இருந்தவர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டது.

நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, கழுகு படத்தில் நடித்த பிரபல நடிகர் கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அடுத்தகட்டமாக பாய்ந்துள்ளது. இவர் முன்னணி இயக்குனரான விஷ்ணுவர்தனின் தம்பி ஆவார். கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர்.

இதனால் தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார். அவர் கேரளாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கிருஷ்ணா உடனடியாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர். போலீசார் நேற்று சம்மன் கொடுக்க சென்றபோது, கிருஷ்ணா வீட்டில் இல்லை. அவரது வீட்டில் இருந்தவர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News