தமிழ்நாடு செய்திகள்

விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் பெருந்துயரம் நடந்திருக்காது- செந்தில் பாலாஜி

Published On 2025-10-01 12:32 IST   |   Update On 2025-10-01 12:32:00 IST
  • ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது, இதனை அரசியலாக பார்க்க வேண்டாம்.
  • த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்தில் ஒரு காலி குடிநீர் பாட்டிலையாவது பார்த்தீர்களா?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கடந்த 27-ந்தேதி கரூரில் நடந்த துயர சம்பவம் என்பது கொடுமையானது.

* யாராலும் எந்த சூழ்நிலை ஏற்றுக்கொள்ள முடியாத துயர சம்பவம்.

* தமிழ்நாட்டில் எங்கும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

* கரூர் துயர சம்பவத்தை அரசயலாக பார்க்காமல் மனித நேயத்துடன் அணுக வேண்டும்.

* கரூரில் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறேன்.

* ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது, இதனை அரசியலாக பார்க்க வேண்டாம்.

* தற்போதைய நிலவரத்தில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அனைவருக்குமான பொது நபராக மக்களின் அன்பை பெற்றுள்ளேன்.

* த.வெ.க. கேட்ட இடங்களில் அதிகம் பேர் நிற்க முடியும் இடம் வேலுசாமிபுரம்தான்.

* எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை முடிவு செய்து இடத்தை தேர்வு செய்வது கட்சிகளின் பணி.

* லைட் ஹவுஸ் கார்னரில் அதிகபட்சமாக 7 ஆயிரம் பேர் தான் நிற்க முடியும்.

* கூட்டத்திற்கு வருவபவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும்.

* தொண்டர்களுக்கு தேவையான குடிநீரை அளிக்க வேண்டியது கட்சிகளின் பொறுப்பு.

* த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்தில் ஒரு காலி குடிநீர் பாட்டிலையாவது பார்த்தீர்களா?

* லைட் ஹவுஸ் கார்னரில் அனுமதி கொடுத்திருந்தால் மாநகர் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

* விஜய் பிரசாரம் 4 மணிக்கு நடந்திருந்தால் கூட இந்த பெருந்துயரம் நடந்திருக்காது. விஜய் குறித்த நேரத்தில் வந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News