தம்பி அரசியலுக்கு புதுசு.. அதிமுகவை விமர்சித்த விஜய்க்கு குஷ்பு கொடுத்த அட்வைஸ்
- வீராப்பில் வார்த்தைகளைப் பார்த்துப் பேச வேண்டாம்.
- தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னத்தை அறிமுகம் செய்தார்.
தவெக தலைவர் விஜய் தலைமையில் நேற்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அக்கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னத்தை அறிமுகம் செய்த விஜய் வழக்கம்போல் எழுச்சியுரை ஆற்றினார். குறிப்பாக அதிமுக குறித்து முதல் முறையாக விஜய் விமர்சித்தார்.
அக்கூட்டத்தில் பேசிய விஜய், "தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றி மாற்றி வாக்களித்து தற்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள். தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது" என்று அதிமுகவை முதல்முறையாக கடுமையாக தாக்கி பேசினார்.
இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக இடம்பெற்ற என்டிஏ கூட்டணியின் பாஜகவை சேர்ந்த குஷ்பு விஜய் பேச்சுக்கு பதிலளித்துள்ளார்.
குஷ்பு கூறியதாவது, "மேடையில் இருக்கும்போது விசில் சத்தம் கேட்டு, வீராப்பில் வார்த்தைகளைப் பார்த்துப் பேச வேண்டாம். தம்பி அரசியலுக்கு புதுசு, திருந்திவிடுவார்.
அதிமுகவினர் அரசியலுக்கு நேற்று வந்தவர்கள் கிடையாது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இபிஎஸ் என வேர் ஊன்றி இருக்கும் ஒரு கட்சி, சரணடைய வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.