தமிழ்நாடு செய்திகள்

ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய் - ஆட்சியரிடம் மனு அளித்தார் செங்கோட்டையன்

Published On 2025-12-07 08:28 IST   |   Update On 2025-12-07 08:28:00 IST
  • த.வெ.க.வில் தனக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.
  • விஜய் வருகையின் போது ஈரோட்டில் பெரும் எழுச்சி ஏற்படும்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இதனிடையே, காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் உள்அரங்கத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். இதன்பின் எந்தவொரு சந்திப்பும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.

இதனிடையே, வருகிற 16-ந்தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு ஆட்சியரை சந்தித்து செங்கோட்டையன் மனு அளித்தார்.

ஈரோட்டில் வருகிற 16-ந்தேதி விஜயின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து செங்கோட்டையன் மனு அளித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்,

* த.வெ.க.வில் தனக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.

* விஜய் வருகையின் போது ஈரோட்டில் பெரும் எழுச்சி ஏற்படும்.

* தனியார் இடம் தேர்வு செய்திருக்கிறோம், ரோடு ஷோ தவிர்த்திருக்கிறோம் என்றார்.

Tags:    

Similar News