தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

Published On 2025-04-23 21:20 IST   |   Update On 2025-04-23 21:20:00 IST
  • விருந்தின்போது எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு சாப்பிட்டார்.
  • விருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினரை உற்சாகத்தோடு வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளார்.

இதன்படி இன்று இரவு சென்னை அடையாறு பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் இன்று இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் 7 வகையான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.

மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகியவை பரிமாறப்படுகிறது. அதே நேரத்தில் அசைவ சாப்பாட்டை விரும்பாதவர்கள், சைவ உணவை சாப்பிடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சைவ உணவில் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, ஆகியவற்றுடன் சாதம் சாம்பார், ரசம், பொரியல், அவியல் போன்றவையும் இடம் பெற்றிருந்தன.

இந்த இரவு விருந்தின்போது எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு சாப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள இரவு விருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களுக்கு விருந்தளித்த நிலையில் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்து வந்த செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களை தனியாக சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News