தமிழ்நாடு செய்திகள்

சலூன் கடையில் சலுகை கட்டணம்: ஒரு ரூபாயில் பள்ளி மாணவர்களுக்கு சிகை அலங்காரம்

Published On 2025-06-02 07:40 IST   |   Update On 2025-06-02 08:36:00 IST
  • கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
  • 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முடி வெட்ட சலூன் கடைக்கு வந்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார். இன்று (திங்கட்கிழமை) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒரு ரூபாயில் மூர்த்தி சிகை அலங்காரம் செய்தார்.

இதை கேள்விப்பட்டு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முடி வெட்ட சலூன் கடைக்கு வந்தனர். அனைவருக்கும் தலா ஒரு ரூபாய் சலுகை கட்டணத்தில் மூர்த்தி சிகை அலங்காரம் செய்தார்.

இதுகுறித்து மூர்த்தி கூறும் போது, 'இந்த ஆண்டுபள்ளிகள் திறப்பை முன்னிட்டு எனது கடையில் முதல் முறையாக மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு முடி வெட்டினேன். அந்த வகையில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து முடி வெட்டிச்சென்றனர்' என்றார்.

Tags:    

Similar News