தமிழ்நாடு செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 337 கிலோ கஞ்சா அழிப்பு

Published On 2025-07-11 14:15 IST   |   Update On 2025-07-11 14:15:00 IST
  • கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 135 கஞ்சா வழக்குகளில் 337 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
  • 337 கிலோ கஞ்சாவை கோவை மதுக்கரை செட்டிப்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 135 கஞ்சா வழக்குகளில் 337 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1கோடியாகும்.

சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி, கோவை இன்றியமையா பண்டக விதிக்கு உட்பட்ட தனிச்சிறப்பு கோர்ட்டு நீதிபதி உத்தரவுப்படி திருப்பூர் மாநகர கஞ்சா அழிப்பு குழுவினர் நேற்று 337 கிலோ கஞ்சாவை கோவை மதுக்கரை செட்டிப்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர்.

திருப்பூர் கஞ்சா அழிப்பு குழுவின் தலைவரும், மாநகரபோலீஸ் கமிஷனருமான ராஜேந்திரன் மேற்பார்வையில் மாஜிஸ்திரேட்டுகள் செந்தில்ராஜா, லோகநாதன், கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா அழிக்கப்பட்டது. 

Tags:    

Similar News