தமிழ்நாடு செய்திகள்

அன்புமணி பக்கம் சாய்ந்த ராமதாஸ் ஆதரவாளர் - ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த எம்.எல்.ஏ. அருள்

Published On 2025-05-31 12:37 IST   |   Update On 2025-05-31 12:37:00 IST
  • சோழிங்கநல்லூர் வந்த அன்புமணிக்கு பா.ம.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • அன்புமணியை முதலில் ஆதரித்து பேசிய பா.ம.க. பொருளாளர் திலகபாமாவை கண்டித்தவர் வடிவேல் ராவணன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் அன்புமணி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று 2-வது நாளாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில் சோழிங்கநல்லூர் வந்த அன்புமணிக்கு பா.ம.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பா.ம.க. பொதுச்செயலாளரான வடிவேல் ராவணன் அன்புமணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாசின் ஆதரவாளராக இருந்த வடிவேல் சரவணன் அன்புமணி பக்கம் தாவி உள்ளார்.

அன்புமணியை முதலில் ஆதரித்து பேசிய பா.ம.க. பொருளாளர் திலகபாமாவை கண்டித்தவர் வடிவேல் ராவணன். தற்போது திலகபாமாவுடன் மேடையில் அமர்ந்து அன்புமணிக்கு வடிவேல் ராவணன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அன்புமணியின் ஆலோசனை கூட்டத்தை பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் புறக்கணித்துள்ளார்.

Tags:    

Similar News