தமிழ்நாடு செய்திகள்

எனக்கு பொறுப்பு வேண்டாம்: பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன் - ராமதாஸ்

Published On 2025-05-29 11:45 IST   |   Update On 2025-05-29 11:45:00 IST
  • பா.ம.க. செயல் தலைவர் பதவியை ஏற்று அன்புமணி சுற்றுப்பயணம் செல்ல வேண்டும்.
  • மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு 8 பேர் வந்தபோதே நான் செத்துவிட்டேன்.

தைலாபுரம்:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

* என்ன தவறு செய்துவிட்டேன் என கேள்விகேட்டு கட்சிக்காரர்களிடமும், மக்களிடமும் என்னை குற்றவாளியாக அடையாளம் காட்டி அனுதாபம் தேட அன்புமணி முயல்கிறார். தவறான ஆட்டத்தை தொடங்கி முதலில் அடித்து ஆட தொடங்கியது அவர்தான்.

* இதையெல்லாம் நான் ஏதோ போகிறப்போக்கில் சும்மா சொல்லவில்லை. ஆதாரத்தோடு, ஒளிவு மறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்துகிறேன்.

* பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருந்தால் குறைந்தது மூன்று இடமாவது கிடைத்திருக்கும். அவர்களும் 6 முதல் 7 இடங்களுக்கு மேலேவே ஜெயித்திருப்பார்கள்.

* ஆளுயர கண்ணாடியான கட்சியை ஒரு நொடியில் போட்டு உடைத்து விட்டார் அன்புமணி.

* பா.ம.க. செயல் தலைவர் பதவியை ஏற்று அன்புமணி சுற்றுப்பயணம் செல்ல வேண்டும்.

* மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு 8 பேர் வந்தபோதே நான் செத்துவிட்டேன்.

* எனக்கு பொறுப்பு வேண்டாம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

* தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன் என்றார். 

Tags:    

Similar News