தவெக 2வது மாநில மாநாடு: முழு வீச்சில் விறுவிறுப்பாக நடந்துவரும் பணிகள்
- தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் நடக்க உள்ளது.
- பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் நடந்து வருகிறது.
மதுரை:
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது.
பார்க்கிங், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மாநாட்டு மேடை 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர 200 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.
மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்துசென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் அமைக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணி, மகளிர் பாதுகாப்பு, ஊடக ஒருங்கிணைப்பு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு என 13 குழுக்கள் நியமனம்.
ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கான தனி பாதைகள்.
பெண்களுக்கு என பிங்க் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அவசர தேவைக்காக டிரோன்கள் மூலம் மருத்துவ பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கவும் திட்டம்.
மாநாட்டு திடலைச் சுற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
50க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்களும் மருத்துவ சேவையில் ஈடுபட உள்ளன.
100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றுகிறார்.
மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட்களுடன் விஜய் கட் அவுட்டும் நிறுவப்பட்டுள்ளது.