தமிழ்நாடு செய்திகள்

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்

Published On 2025-04-04 07:17 IST   |   Update On 2025-04-04 07:17:00 IST
  • பிளஸ்-2 தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.
  • மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன.

சென்னை:

பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நிறைவு பெற்ற நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி ஆரம்பித்து 25-ந்தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க இருக்கின்றன. 

இதற்காக மாநிலம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட இருப்பதாகவும், ஏற்கனவே திட்டமிட்டபடி, மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன.

Tags:    

Similar News