தமிழ்நாடு செய்திகள்

தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை: பியூஷ் கோயல் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிறைவு

Published On 2025-12-23 15:15 IST   |   Update On 2025-12-23 15:15:00 IST
  • மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.
  • எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்தார்.

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

தமிழக பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.

இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மத்தியமந்திரி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை தனியார் ஹோட்டலில் நடந்த பியூஷ் கோயல் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. அதிமுக - பாஜக இடையே நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

ஏற்கனவே பா.ஜ.க. 80 தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக அடையாளம் கண்டு வைத்து உள்ளது. இதில் இருந்துதான் கூட்டணியில் தொகுதிகளை கேட்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News