தமிழ்நாடு

உட்காரும் உரிமை சட்டத்தை பின்பற்றாத 31 கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராத நோட்டீஸ்

Published On 2024-12-05 16:06 IST   |   Update On 2024-12-05 16:06:00 IST
  • கட்டாயம் இருக்கை வழங்க வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் 2 நாட்களாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
  • கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து தொழிலாளர் நல அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஊழியர்கள் பல மணி நேரம் நின்றுக் கொண்டே வேலை பார்க்கும் நிலை இருந்தது.

அதனால், நின்றுக் கொண்டே வேலை பார்க்கும் கடைகளில் அவர்கள் அமர இருக்கை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது.

இதைதொரட்ந்து, தமிழக அரசு "உட்காரும் உரிமை" Right to Sit சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

கேரளாவை தொடர்ந்து, தமிழகத்திலும் கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் இல்லாதபோது அமர்ந்து கொள்ள இருக்கை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோட்டில், கடைகள், வணிக நிறுவனங்களில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கு இடையிடையே அமர்ந்து கொள்ள, கட்டாயம் இருக்கை வழங்க வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் 2 நாட்களாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், அரசின் சட்டத்தை பின்பற்றாமல் ஈரோட்டில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இருக்கை வழங்காத 31 கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து தொழிலாளர் நல அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News