தமிழ்நாடு செய்திகள்
சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- சென்னை மாநிலக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு விடுதி கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடியில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உயர்கல்வித்துறை சார்பில் ரூ.63 கோடி செலவில் சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
கலைஞர் அரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநிலக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
மேலும், சென்னை மாநிலக் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு விடுதி கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.