தமிழ்நாடு செய்திகள்

தரம் தரம் என்றார்கள்..! நீட் தேர்வில் பணம்தான் விளையாடுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-06-23 19:00 IST   |   Update On 2025-06-23 19:00:00 IST
  • நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்!
  • நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் நீட் தேர்வு முறைகேட்டில் இருவரை சிபிஐ கைது செய்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தரம், தரம் என்றார்கள்!

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.

நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.

நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்!

RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News