தமிழ்நாடு செய்திகள்

விடியல் பயணம் திட்டம் மூலம் 881 கோடி முறை மகளிர் பாதுகாப்பாக பயணம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On 2026-02-17 10:06 IST   |   Update On 2026-02-17 10:06:00 IST
  • கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.
  • வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகள் 1,400 பேர் தமிழ் கற்று பயனடைந்துள்ளனர்.

சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

நான்கரை ஆண்டுகளில் தி.மு.க. அரசு செய்த சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டு அமைச்சர் தங்ககம் தென்னரசு சட்டசபையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப்போரை தொடங்கி உள்ளோம்.

* அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய நீர் வளம் பெருக்கி உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை செய்துள்ளோம்.

* உலகை வெல்லும் இளைஞர்களை உருவாக்கிட நாம் வடிவமைத்த திட்டங்கள் அனைத்தும் வெற்றி.

* மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை உள்ளிட்ட சவால்களுடன் பயணம் செய்து வருகிறோம்.

* பன்னாட்டுத் தனித் தமிழ் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

* கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.

* தந்தை பெரியாரின் நூல்கள் 21 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

* கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலைக்கு பேரறிவுச் சிலை என பெயர் சூட்டியவர் முதலமைச்சர்.

* தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன.

* வரவு செலவு திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கலைஞர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

* தமிழ்தாய் வாழ்த்தை மாநில பாடலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது

* தமிழக அரசின் முத்திரை திட்டங்களில் முதன்மையானது மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் வங்கிக் கணக்கில் 3 மாத தொகை ரூ.3000, கோடை கால சிறப்புத் தொகை ரூ.2000 என ரூ.5000 வரவு வைக்கப்பட்டது.

* ஒரே நாளில் ரூ.6500 கோடி நிதியை ஏழை எளியவரின் கரங்களுக்கு சென்று சேர்த்தவர் முதலமைச்சர்.

* மகளிர் தற்சார்பு வாழ்வுக்காக சுய உதவிக்குழுக்களை கலைஞர் கருணாநிதி தொடங்கினார்.

* விடியல் பயணம் திட்டம் மூலம் 881 கோடி முறை மகளிர் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

* வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகள் 1,400 பேர் தமிழ் கற்று பயனடைந்துள்ளனர்.

* கைம்பெண்களின் கண்ணிய வாழ்வை உறுதி செய்திட நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

* மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 35 என்ற அளவில் உள்ளது.

* புதிய அருங்காட்சியகங்கள் அமைப்பதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் 10,469 வீடுகள் கட்டித்தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News