இடைக்கால பட்ஜெட்: மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு
- ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.28,687 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செயல்பட்டு வருகிறது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டிற்கு பதக்கம் பெற்றுத் தந்த 5403 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.176 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மூலம் ரூ.101 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
* 1.14 லட்சம் வீடுகள் ரூ.969 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டுள்ளன.
* கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 20,484 கி.மீ. சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
* ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.28,687 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் 87 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* 40 ஆண்டுகளுக்கு மேலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை புதுப்பிக்க ரூ.809 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நதிக்கரை மேம்பாட்டிற்காக ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நகராட்சி நிர்வாகத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செயல்பட்டு வருகிறது.
* 5 ஆண்டுகளில் 38 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,397 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுகின்றன.
* தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கொரோனா பெருந்தொற்றை தி.மு.க. அரசு பேராற்றலுடன் சமாளித்தது.
* காவிரி, வைகை ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு பூங்காக்கள் அமைக்க ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.
* முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில் இதுவரை 6,374 கோடி ரூபாய் மக்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.
* புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
* இதுவரை 79.17 லட்சம் பேருக்கு செய்யப்பட்டசோதனையில் 1,929 நபர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
* மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 36 லட்சத்திற்கு அதிகமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
* 12.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
* 11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.
* 40 புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் அமைக்க ரூ.291 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை உதவித்தொகை தரப்படுகிறது.
* திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1070 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.