தமிழ்நாடு செய்திகள்

இடைக்கால பட்ஜெட்டில் கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு

Published On 2026-02-17 11:46 IST   |   Update On 2026-02-17 11:46:00 IST
  • இடைக்கால பட்ஜெட்டில் வீட்டுவசதி, நகர்ப்புறத்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

* பால் பண்ணைகள் நவீனமயமாக்கலுக்காக ரூ.758 கோடி செலவிடப்பட்டுள்ளது.

* இடைக்கால பட்ஜெட்டில் கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.612 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இடைக்கால பட்ஜெட்டில் வீட்டுவசதி, நகர்ப்புறத்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இடைக்கால பட்ஜெட்டில் பொதுப்பணித்துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு

* மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து நிதி வழங்காத நிலையிலும் ஆசிரியர், அரசு ஊழியர் நலனை காத்து வருகிறோம்.

* அரசு பணியில் இருப்பவர் விபத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் ரூ.1 கோடி வழங்கப்படும்.

* ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்கிறது. 5 ஆண்டுகளில் புதிதாக 43 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

* மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 23.50 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

* கடந்த 5 ஆண்டுகளில் 17318 பேர் புதிதாக காவல்துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* போதை பொருள்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

* பள்ளி, கல்லூரிகளில் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடம் தமிழ்நாடு முதலிடம்.

* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறைக்கு ரூ.17,111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News