தமிழ்நாடு செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

Published On 2024-12-13 14:16 IST   |   Update On 2024-12-13 14:16:00 IST
  • தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பிற்பகல் 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிற்பகல் 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News