தமிழ்நாடு செய்திகள்

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி விரைகிறார் நயினார் நாகேந்திரன்

Published On 2025-09-11 09:42 IST   |   Update On 2025-09-11 09:42:00 IST
  • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர்.
  • நயினார் நாகேந்திரனுடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர்.

தமிழகத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர்.

கூட்டணியில் இருந்து விலகிய டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என்றும், அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் கூறி இருந்தார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். அவருடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர்.

சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர். டெல்லி செல்லும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News