தமிழ்நாடு செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் முத்தரசன் சந்திப்பு

Published On 2025-02-19 15:08 IST   |   Update On 2025-02-19 15:08:00 IST
  • மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நடைபெற்றது.
  • வருகிற 21-ந்தேதி மக்கள் நீதி மய்யத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அமெரிக்காவில் சினிமா தொடர்பான ஏ.ஐ. படிப்பை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். இதன் பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சந்தித்து பேசினார்கள். தி.மு.க. சார்பில் கமல்ஹாசன் விரைவில் மேல்சபை எம்.பி.யாக உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளரான முத்தரசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உடனிருந்தார்.

வருகிற 21-ந்தேதி மக்கள் நீதி மய்யத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று கொடியேற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்குகிறார்.

Tags:    

Similar News