தமிழ்நாடு செய்திகள்

'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள் வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் - மு.க.ஸ்டாலின்

Published On 2026-01-03 10:32 IST   |   Update On 2026-01-03 10:38:00 IST
  • இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
  • தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும்!

வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, 'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும்!

இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது #DravidianModel அரசு.

அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டினோம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குத் திருவுருவச்சிலை அமைத்தோம்.

தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News