ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
- உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி.
- தமிழக அரசின் வாதத்தையும் நியாயத்தை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர்.
இதனால் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன.
மேலும் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்த தீர்ப்பை அடுத்து சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
* வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது.
* உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி.
* தமிழக அரசின் வாதத்தையும் நியாயத்தை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
* மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று கூறினார்.