தமிழ்நாடு செய்திகள்

சென்னையை தொடர்ந்து மதுரையிலும்... தூய்மைப் பணியாளர்கள் நாளை முதல் போராட்டம்

Published On 2025-08-17 12:39 IST   |   Update On 2025-08-17 12:39:00 IST
  • மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம்
  • தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது

இந்நிலையில், மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Tags:    

Similar News