தமிழ்நாடு செய்திகள்

மதுரை-குருவாயூர் ரெயில் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும்

Published On 2025-09-19 09:07 IST   |   Update On 2025-09-19 09:07:00 IST
  • பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.

மதுரை:

திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை வழியாக குருவாயூர் செல்லும் ரெயில் (வ.எண்.16327) நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் குருவாயூர்-மதுரை ரெயில் (வ.எண்.16327) வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.

திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16343) நாளை ஒரு நாள் மட்டும் மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, செங்கனச்சேரி மற்றும் கோட்டயம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக ஆலப்புழை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் ஹரிபாடு, அம்பாலப்புழை, ஆலப்புழை, சேர்த்தலை மற்றும் எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Tags:    

Similar News