தமிழ்நாடு செய்திகள்

ஜெயலலிதாவுக்கு அடுத்து வலிமை மிகுந்த பெண் தலைவர் பிரேமலதா தான் - எல்.கே.சுதீஷ்

Published On 2025-08-11 13:08 IST   |   Update On 2025-08-11 13:08:00 IST
  • தமிழகத்தில் சிறந்த பெண் அரசியல்வாதி என்று பிரேமலதாவை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தார்கள்.
  • பெண் ஆளுமையின் தலைமையின் கீழ் இயங்கும் கட்சி தே.மு.தி.க.

ஜெயலலிதாவும் பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எல்.கே.சுதீஷ் பகிர்ந்ததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எல்.கே.சுதீஷ் கூறியதாவது:-

தமிழகத்தில் சிறந்த பெண் அரசியல்வாதி என்று பிரேமலதாவை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தார்கள். அப்போது, ஜெயலலிதாவையும் பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசினேன்.



அம்மையார் ஜெயலிலதா இருக்கும் போது புரட்சித்தலைவி என்றும் சிங்கப்பெண், லயன் லேடி என்று கூறுவார்கள். இன்றைக்கு அதே இடத்தில் என்னுடைய சகோதரியும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சிங்கப்பெண்ணாக இருக்கிறார். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்து வலிமை மிகுந்த பெண் தலைவராக இருக்கிறார் என்றால் அது பிரேமலதா தான். அதனால் தான் ஒப்பிட்டு பேசுகிறேன். பெண் ஆளுமையின் தலைமையின் கீழ் இயங்கும் கட்சி தே.மு.தி.க. நேற்றைய தினம் சிங்கத் தினம் (லயன் டே) என்பார்கள். அந்த தினத்தையொட்டி ஜெயலலிதாவையும், பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசியதாக கூறினார். 

Tags:    

Similar News