தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இண்டிகோ விமான சேவை இன்று மாலை வரை ரத்து

Published On 2025-12-05 13:11 IST   |   Update On 2025-12-05 13:11:00 IST
  • சென்னையில் இன்று 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை உள்பட பயணிகள் விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு.

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.

மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் 3-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.

இந்த நிலையில், 4-வது நாளாக இன்று சென்னையில் 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட இருந்த அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று (டிச.5) மாலை 6 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை உள்பட பயணிகள் விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News