தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.-வில் புடிச்சா இருக்கப் போறேன்.. இல்லனா கிளம்பப் போறேன்..!- அண்ணாமலை

Published On 2025-10-31 20:48 IST   |   Update On 2025-10-31 20:48:00 IST
  • திமுக தலைவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்தி பேசியதைத்தான், பிரதமர் மோடி பீகாரில் எடுத்து பேசினார்.
  • பதவிலாம் வெங்காயம் மாதிரி. உரிச்சா ஒன்னுமே இருக்காது.

கோவையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அமித்ஷாவும், மோடியும் தூய அரசியலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் வேலையை விட்டுவிட்டு வந்து பாஜகவில் பயணம் செய்கிறேன். புடிச்சிருந்தா இருக்கப் போறேன். இல்லைனா கிளம்பப் போறேன்.

பதவிலாம் வெங்காயம் மாதிரி. உரிச்சா ஒன்னுமே இருக்காது. மகாத்மா காந்தி என்ன பதவியில் இருந்தார்?

சில நேரங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, சபை நாகரித்திற்காக எனது மனசாட்சிக்கு எதிராகக்கூட பேச வேண்டிய சூழல் வருகிறது. மனசு ஒன்னு சொல்லுது. வாய் ஒன்னு சொல்லுது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த விடமாட்டோம் என தமிழக அமைச்சர்கள் யாரேனும் சொன்னால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். திமுக தலைவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்தி பேசியதைத்தான், பிரதமர் மோடி பீகாரில் எடுத்து பேசினார்.

பிரதமர் மோடி தமிழக மக்களைப் பற்றி தவறாக கூறிவிட்டதாக முதல்வர் கூறுகிறார். முன்னதாக தயாநிதி மாறன், டிஆர்பி ராஜா, பொன்முடி, ஆ.ராசா போன்றவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்தினார்கள்.

பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமில்லை. தனிக்கட்சி எல்லாம் தொடங்கி என்னால் நடத்த முடியுமா? என் உயரம் எனக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News