தமிழ்நாடு செய்திகள்
துணிச்சல் வழிநடத்தும்போது வரலாறு படைக்கப்படுகிறது..!- மகளிர் அணிக்கு முதலமைச்சர் வாழ்த்து
- இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின.
- பார்வை மாற்றுத்திறனாளி டி-20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம்.
பார்வையற்றோர் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், பார்வை மாற்றுத்திறனாளி டி-20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவுது:-
முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற நமது அற்புதமான பெண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
துணிச்சல் வழிநடத்தும்போது வரலாறு படைக்கப்படுகிறது.
சாம்பியன் பட்டம் வென்ற மகளிர் அணி இந்தியாவின் பெருமையாகவும், உலகிற்கு உத்வேகமாகவும் உயர்ந்து நிற்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.