தமிழ்நாடு செய்திகள்
null

பாஜக ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுவரையில் அமல்படுத்தியதுண்டா? - பெ.சண்முகம் கேள்வி!

Published On 2026-01-04 14:37 IST   |   Update On 2026-01-04 14:41:00 IST
  • ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர் - அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது பாஜக ஆட்சிதான்
  • நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பிஜேபி அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?

"அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஓய்வூதியம் ஏமாற்று வேலை. 5 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்போது தேர்தல் வருவதால் ஓய்வூதியம் குறித்து அறிவிப்பை வெயிட்டுள்ளார்கள்" என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஓய்வூதியம் அறிவிப்பு தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

"தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை 'ஏமாற்று வேலை' என்று கூறும் நயினார் நாகேந்திரன் அவர்களே!ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர் - அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது பாஜக ஆட்சிதான். நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பிஜேபி அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? பிஜேபி ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுவரையில் அமல்படுத்தியதுண்டா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 


Tags:    

Similar News