தமிழ்நாடு செய்திகள்

முத்துக்கண்ணம்மாள் முதல் அனிருத் வரை.. கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள்- முழு பட்டியல்

Published On 2025-10-11 18:56 IST   |   Update On 2025-10-11 18:56:00 IST
  • இசை பிரிவில் குரலிசை பாபநாசம் அசோக் ரமணி, தேவார இசை ஓதுவார் சற்குருநாதன் விருது பெற்றனர்.
  • தமிழிசை பாடகர் டி.ஏ.எஸ். தக்கேசி, மிருதங்க வித்துவான் திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.

அப்போது அவர்," 90 வயதான முத்துக்கண்ணம்மாளும் விருது பெறுகிறார். இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார்.

மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன" என்றார்.

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களின் முழு விவரம்:

பாரதியார் விருதை (இயல்) முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கு விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.யேசுதாஸ்க்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு விருது வழங்கப்பட்டது.

இசை பிரிவில் குரலிசை பாபநாசம் அசோக் ரமணி, தேவார இசை ஓதுவார் சற்குருநாதன் விருது பெற்றனர்.

தமிழிசை பாடகர் டி.ஏ.எஸ். தக்கேசி, மிருதங்க வித்துவான் திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.

இசையமைப்பாளர் அனிருத், நடிகை சாய் பல்லவி, எஸ்.ஜே.சூர்யா, மணிகண்டன், இயக்குநர் லிங்குசாமிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா, நடிகர் ஜார்ஜ் மரியான், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குனர் சாண்டிக்கு விருது வழங்கப்பட்டது.

2021ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது திருநாவுக்கரது, நெல்லை ஜெயந்தா, எஸ்.சந்திரசேகருக்கு விருது வழங்கப்பட்டது.

2022ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது சாந்தகுமாரி, அப்துல்காதர், முத்துகணேசனுக்கு வழங்கப்பட்டது.

2023ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது, கவிஞர் ஜீவபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags:    

Similar News